பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளை சுத்தப்படுத்தி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்த குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் 100 விழுக்காடு அளவிற்கு வருகை புரிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments