நாம் வாழும் இந்த பூமியானது 365 நாட்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று எல்லோருக்குமே தெரிந்த விடயம்.
ஆனால் இந்த பூமி திடிரென்று சுற்றுவது நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது கற்பனை செய்ததுண்டா? ஒருவேளை அப்படி நடந்தால் என்னவாகும் என்று பார்க்கலாம். பூமி சுற்றுவதை நிறுத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள் உண்டாகும்..
1)மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கீ.மி வேகத்தில் சுற்றும் பூமியானது திடிரென்று சுழற்சியை நிறுத்தும் பொழுது பூமியுடன் உறுதியாகப் பிணைக்கப்படாத அத்தனைப் பொருட்களும் உயிரினங்களும் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும்.
2)கடல் நீரும் பூமியுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருக்கவில்லை எனவே பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான சுனாமி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது.
3) பூமி தன்னைத் தானே சுற்றுவது நிறுத்திய போதிலும் சூரியனைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீதி ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும். தொடர்ந்து 6 மாதங்கள் சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் அதிக அளவிலான வெப்பம் இருக்கும்.
4) இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனிப் பிரதேசமாகவும் மீதி 6 மாதம் ஒளியில் உள்ளவை பாலைவனமாகவும் மாறி விடும். இந்த மாற்றத்தைத் தாங்காமல் நுண்ணுயிர்கள் கூட முற்றிலுமாக அழிந்து விடும்.
5) சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்குப் பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இதுமட்டுமல்லாமல் இந்த வினோத நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.
6) பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் மிகப் பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடும்.
7) பூமி தன்னைத் தானே சுற்றுவதை நிறுத்தும் அடுத்த நொடியே பூமியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்து போய் விடும். இதனால் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர்கள் மீதம் உள்ள உயிர்களையும் அழித்து விடும். அதுமட்டுமில்லாமல் centrifugal force எனப்படும் மையவிலக்கு விசையால் பூமத்திய ரேகையில் நிலம் சிறிய அளவில் தொடர்ச்சியாக வீக்கமடைந்து காணப்படும். பின்னர் சிறிது காலத்திற்குப் பின்னர் அந்தப் பகுதி மீண்டும் தட்டையாக மாறும் என்று கூறப்படுகிறது.
மேலும் புவி ஈர்ப்பு விசை அதிகம் இருக்கக் கூடிய துருவப் பகுதிகளை நோக்கி கடல் நகரும் என்றும் நிலப்பகுதி பூமத்திய ரேகை பகுதியில் ஒரே கண்டமாக ஒன்றாகி விடும் என்றும் கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பூமியின் காந்த விசை சிறுகச் சிறுக வலுவிழந்து ஒரு கட்டத்தில் மறைந்து போகும் நிலை உருவாகும். இதன் விளைவாக காஸ்மிக் கதிர்கள் அதிக அளவில் பூமியைத் தாக்கக் கூடும் இதன் மூலம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழல் ஏற்பட்டு பூமி முற்றிலுமாக அழிந்து போகும் நிலை ஏற்படும்.
0 Comments