ஒற்றளபெடை

 ஒற்றளபெடை


"கலங்ங்கு நெஞ்சமிலை காண்"


மேற்கண்ட தொடரில் 'கலங்ங்கு' என்னும் சொல்லில் உள்ள மெய்யெழுத்து அளபெடுத்துள்ளது. 'கலாங்கு' எனும் இயல்பான சொல்லால் செய்யுளில் ஓசை குறைகின்றது. எனவே இதில் உள்ள மெய்யெழுத்து அளபெடுத்துள்ளது அதற்குக் குறியீடாக மெய்யெழுத்து இருமுறை வழங்கப்படுகின்றது. இவ்வாறு செய்யுளில் ஓசை குறையும் பொழுது, அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்பர்


மெய்யெழுத்துகளுள் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் ஆய்தெழுத்தும் அளபெடுக்கும் 

ஒற்றளபெடை சொல்லின் இடையிலும் இறுதியிலும் மட்டுமே நிகழும்

குறிற்கிழும், குறிலிணைக்கீழும் உள்ள மெய்யெழுத்துகள் மொழியின் இடையிலும் இறுதியிலும் அளபெடுக்கும்.


(எ-டு) கண்ண் கருவினை - குறிற்கீழ் உள்ள ணகரமெய் சொல்லின் இறுதியில் அளபெடுத்தது.


விடங்ங் கலந்தானை - குறிலிணைக் கீழ் உள்ள ஙகரமெய், சொல்லின் ஈற்றில் அளபெடுத்தது


இலங்ங்கு வெண்பிறை - குறிலிணைக் கீழ் உள்ள மெய், சொல்லின் இடையில் அளபெடுத்தது


எஃஃகிலங்கிய கையர் இலஃஃகு முத்தின் - குறிற்கீழ் ஆய்தம் அளபெடுத்தது. குறிலிணைக் கீழ் ஆய்தம் அளபெடுத்தது; ஆய்தம் அளபெடுத்ததையும் ஒற்றளபெடை என்றே கூறுவர்


Post a Comment

0 Comments