கற்பூரம் எப்படி கிடைக்கிறது.

 உலகத்திலேயே கற்பூரத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான் என்றாலும் ஜப்பான், சீனாவில்தான் கற்பூர மரங்கள் அதிகம். 



கற்பூர மரங்கள் இப்போது நம் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கற்பூர மரங்கள் நன்கு வளர்ந்து, முற்றவேண்டும். ஒரு கற்பூர மரம் முற்றுவதற்கு 70 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. 1938-ஆம் ஆண்டு பயிரிடப்பட்ட கற்பூர மரங்கள் இப்போது தான் கற்பூரம் தயாரிக்கக்கூடிய பக்குவத்தில் இருக்கும்

சரி, இந்த கற்பூர மரங்களில் இருந்து எப்படி கற்பூரம் கிடைக்கிறது ? 70 வயதான முற்றிய கற்பூர மரத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி தண்ணீரோடு சேர்த்து, 36 மணி நேரம் கொதிக்கவைத்து, அதனுடைய ஆவியைக் குளிரவைக்கிறார்கள். பிறகு அதன் மூலம் கிடைக்கக்கூடிய உப்பு போன்ற வெண்மைநிற படிவங்கள்தான் கற்பூரம்.

 இது ஒரு பூஜைப் பொருள் மட்டுமல்ல, ஒரு கிருமிநாசி னியும்கூட. போட்டோ பிலிம், சினிமா பிலிம் தயாரிக்க கற்பூரம் பயன்படுகிறது. இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய கற்பூரம் விலை அதிகம் என்பதால், சில நிறுவனங்கள் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி செயற்கை கற்பூரம் தயாரித்து விற்பனை செய்கின்றன.

Post a Comment

0 Comments