கண்களின் குறைபாடுகள்
குறைபாடற்ற கண்ணில், தூரத்தில் உள்ள பொருள்களில் இருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள், சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன.
வெகு தொலைவு முதல் 25.செ.மீ. அருகில் உள்ள பொருட்கள் வரை தெளிவாகப்பார்க்கும் வகையில் குறைபாடற்ற விழி ஏற்பமைவு பெற்றுள்ளது. இச்சரிய ஒளிச்சிதறல் நிலையை இமெட்ரோபியா (Emmetropia) என்பர். இமெட்ரோப்பி நிலையினிலிருந்து மாறுபாடு அடைந்தால் அதனை ஏமெட்ரோப்பி (Ametropia) என்பர்.
ஏமெட்ரோப்பியாவின் முக்கிய நிலைகள் மையோபிய (Myopia) ஹைப்பர் மெட்ரோபியா (Hyper Metropia) அஸ்டிக்மேட்டி (Astigmatism) மற்றும் பிரஸ்பையோபியா (Prespiopia) ஆகும். ஏமெட்ரோபியாவிற்கான காரணம், கண் கோளம் நீளமாகுதல் அல்லது கண்ணில் ஒளிச்சிதறல் தன்மையில் வேறுபாடு ஏற்படுவதாகும்
மயோபியா -கிட்டப்பார்வை
பமையோபியா எனும் கிட்டப்பார்வை கன் லென்சின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுருவதாலும் ஏற்படுகிறது. உள் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் போது, ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது.
இதனால் பிழ்பம் தெளிவற்றதாக உணரப்படுகிறது. இந்நிலை கிட்டப்பார்வை எனப்படும். எனெனில் தூரத்தில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்பட இயலவில்லை.
இந்நிலையைக் குழி லென்சின் மூலம் சரி செய்யலாம் எவ்வாறு எனில் குழி லென்சின் புறப்பகுதியின் வழியாக உள் செல்லும் ஒளிக்கதிர்கள் சற்றே விலக்குவதால் ஒளிச்சிதறலடைதலும் மாறுபாடு அடைகிறது. இம்மாற்றத்தினால் மையோபியோ நிலையுடைய கண்ணில் ஒளி சரியான முறையில் விழித்திரையில் குவிக்கப்படுகிறது
ஹைப்பர் மெட்ரோபியா - தூரப்பார்வை
கண்ணின் லென்சு பகுதியில் போதுமான புறவளைவு இல்லாததினால் ஹைப்பர் மெட்ரோபியா நிலை உண்டாகிறது. இதனால் ஒளிக்கதிர்கள் போதுமான அளவு சிதறலடையாததால் ஒளியானது விழித்திரைக்குப் பின் பகுதியில் குவிக்கப்படுகிறது.
இந்நிலை தூரப்பார்வை எனப்படும். ஏனென்றால் அருகில் உள்ள பொருள்களில் இருந்து வரும் கதிர்கள், தூரத்தில் உள்ள பொருள்களிலிருந்து வரும் கதிர்களைப் போல் சரியாகக் குவிக்கப்படுவதில்லை.
இந்நிலையை குவிலென்சின் மூலம் சரி செய்யலாம், எவ்வாரெனில் குவிலென்சானது கண்ணின் உள் ஒளிக்கதிர் விழும் முன் ஒளியை மேலும் குவித்து விடுவதினால் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் சரியாகக் குவிக்கப்படுகிறது.
அஸ்டிக்மேட்டிசம்
இக்குறைபாட்டில் கார்னியா அல்லது லென்ஸ் பாதிப்படைக்கிறது. கண்ணின் ஒருபகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ காணப்படும், இதனால் ஏற்படும் பிம்பங்கள் சரிவரக் குவிக்கப்படுவதில்லை .
பொருளின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னால் மையோபியா போன்றும் மற்ற பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் ஹைப்பர் மெட்ரோபியா போன்றும் குவிக்கப் படுகின்றன.
அஸ்டிக்மேட்டிசத்தைக் கண்ணுக்கு முன் லென்சு வைத்துச் சரிசெய்யலாம். இந்த லென்சின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இவை கண்ணின் குறைபாட்டினைச் சரி செய்கிறது
பிரஸ்பையோபியா :
வயது முதிர்ச்சியால் கண்ணின் லென்ஸ் கடினமாவதினாலும், மீள்த்தன்மை குறைவதினாலும் விழி ஏற்பமைவுத் தன்மையில் (Accomodation) குறைவு ஏற்படுகிறது.
எனவே இது சிக்கலான நிலையை ஏற்படுத்துகிறது. இக்குறைபாடு 40 வயதிலிருந்து ஆரம்பிக்கிறது. வாசிப்பதில் ஏற்படும் குறைபாட்டினைக் குவி லென்சின் மூலம் சரிசெய்யலாம், கண்ணில் ஏதேனும் குறைபாடு தோன்றினால் உடனே கண் லென்சு சம்பந்தப்பட்ட ஆலோசகரை அணுகவேண்டும்.
0 Comments