கண்ணில் ஒளியைக் குவியப்படுத்தும் முறை

 கண்ணில் ஒளியைக் குவியப்படுத்தும் முறை


கண்ணின் வழியே ஒளி செல்லும் போது ஒளிச் சிதறலும், ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகிறது. ஒளியானது, விழித்திரையை அடையும் முன் மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகின்றது. அவை, கார்னியா, லென்சின் முன்பகுதி மற்றும் லென்சின் பின்பகுதிகளாகும். கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் காணப்படும் நீர்மமான திரவம் அக்குவஸ்ஹீமர் எனப்படும். 

லென்சுக்கும்,வழித்திரைக்கும் இடையில் உள்ள பின் அறையில் விட்ரஸ்ஹிமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது. இத்திரவங்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி, விழித்திரையினைத் தடையில்லாமல் அடைகின்றது.

மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்றவாறு தானே குவித்தன்மையை மாற்றும் தன்மையைக் கொண்டது. இத்தன்மை விழியின் ஏற்பமைவு (Accomodation) எனப்படும். இவ்வேற்பமைவு சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள் மற்றும் தாங்கு இழைகள் மூலம் நடைபெறுகின்றது.

கண்ணால் தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்கும் போது சிலியரி தசைகள் முழுவதுமாகத் தளர்ந்து விடுகிறது. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகிறது எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. 

பொருளைக் கண்ணின் அருகினில் கொண்டு வரும்போது, விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை உயர்கிறது.இத்தன்மை லென்சின் மேற்பரப்பின் வளைவுப் பகுதி அதிகரிப்பதினால் ஏற்படுகிறது. 

எனவே அருகில் உள்ள பொருள்களின் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. இதைப் போன்றே தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்கும் போது லென்சை தாங்கியுள்ள தாங்கு இழைகள் மூலம் லென்சானது நீட்சியுற்று லென்சின் தன்மை மாறுபடுகிறது.

Post a Comment

0 Comments